நான் வளர்க்கும் கிளிக்கு நன்றாய் பேச தெரியும் இருந்தும் சொன்னதே இல்லை கூண்டை திறந்து விடுங்கள் என.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உருவாக்குவது கடினம் அழிப்பது எளிது என்ற தத்துவம் தொப்பைக்கு பொருந்தாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சுடும் என தெரிந்தும் சூடாக இருக்கும் தேநீரை பருகுவதில் காட்டும் நிதானம் தான், வாழ்க்கையின் ஆகப் பெரும் தத்துவம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஞானம் அடைதலின் நோக்கமே நமக்கு எந்த ஞானமும் இல்லை என உணர்தல் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தம்பி, உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று யார் உனக்கு சொன்னார்கள்? தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று ஏன் கருதிக்கொள்கிறாய்? பூமியின் கீழே, மிக மிகக் கீழே கிடைக்கிறது வைரம்; உயரத்தில் அல்ல.! - அண்ணாதுரை.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆணாக இருக்கட்டும், பெண்ணாக இருக்கட்டும் எவரும் இங்கு பிறப்பதில்லை வளர்க்கப்பட்டு உருவாக்கப்படுகிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
