வாழ்க்கையில் எதுவுமே சரி இல்லை என்று வருத்தப்படாதீர்கள். வாழ்க்கை நமக்கான தருணங்களை வழங்கிக் கொண்டே இருக்கும். அதை சரியான முறையில் பயன் படுத்தினால் வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காற்றில் பறக்கும் பஞ்சுகூட நூலாகி துணியாகி ஆடையாகும் போது மதிப்பு உயர்கிறது, மானம் காக்கிறது. ஆறறிவு படைத்த மனிதா உன் மதிப்பை உயர்த்திக் கொள், மற்றவர்கள் போற்றிட வாழ்க.!
உனது எண்ணங்களையும், செயல்களையும் உலகை விரும்பச் செய், பிறகு உலகம் விரும்புவதைச் செய். உன் விருப்பம் உலகின் விருப்பமானால் உலகின் விருப்பம் உன் விருப்பமானால் உலகம் உன்னைப் போற்றும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலந்தி பின்னுகின்ற வலைகளில் சிங்கங்கள் ஒருபோதும் சிக்கிக் கொள்வதில்லை, சிங்கம் போல் இரு சிறப்பாக இரு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மீண்டும் ஒரு பயணம் கிடைப்பதில்லை. பாதைகள் எதுவாயினும் விரும்பி பயணிப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வீட்டுக்குள் நுழையும் போது புன்னகையையும் வெளியே செல்லும்போது பொறுமையையும் எடுத்துச் சென்றால் வாழ்க்கை சிறப்பாக அமையும். பொறுமை கடலினும் பெரிது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடவுளை நீ பார்க்கும்படி வாழ்வதைவிட, இவ்வுலகம் உன்னை கடவுளாக பார்க்கும்படி சிறப்பாக வாழ்வதே உயரிய வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!