எல்லாம் உன் அருகில் இருந்தாலும், எல்லாம் உனக்கு கிடைத்தாலும், எல்லாம் உன்னை நோக்கி வந்தாலும் அன்னப்பறவை போல வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு, வேண்டாததை விலக்கி விடு.
பின்குறிப்பு :அன்னப் பறவையால் தண்ணீரையும் பாலையும் பிரித்தெடுக்க முடியாது. இந்திய சிந்தனையில் அன்னம் பெரும்பாலும் முனிவர்கள், யோகிகள் மற்றும் ஞானிகளுடன் தொடர்புடையது. ஒரு ஞானி உண்மையிலிருந்து பொய்யை வேறுபடுத்திப் பார்ப்பது போல, அன்னம் பாலிலிருந்து தண்ணீரைப் பிரிப்பதாக கவிதை ரீதியாகக் கூறப்பட்டது.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தேவைக்கேற்ப வாழ வாய்ப்புகள் நிறைய உள்ளது. ஆசைகளுக்கு ஏற்ப வாழ அகிலமே கிடைத்தாலும் போதாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யானையும் அங்குசத்துக்கு அடங்கும், கப்பலும் நங்கூரத்திற்கு நிற்கும், சூரியனும் இரவில் மறையும், குதிரையும் கடிவாளத்திற்கு அடங்கும். மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் பலம் பலவீனம் உண்டு. பலம் பலவீனம் அறிக.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாளை என்ன செய்யலாம் என யோசியுங்கள். நாளை என்ன நடக்குமோ என யோசிக்காதீர்கள். அது உங்கள் உற்சாகத்தைக் கெடுத்துவிடும்.!
மானின் வேதனையும் கண்ணீரும் சிங்கத்திற்கு புரிவதில்லை. சிங்கத்தின் நோக்கம் மானின் இரத்தமும் கறியும் தான். மான் போல சிலர் சிங்கம்போல சிலர்.!
நல்லவர்களாக வாழ்வதில் ஒரு துன்பமுமில்லை. ஆனால், அதை மற்றவர்களுக்கு நிரூபிக்கப் படுகிற பாடு இருக்கிறதே அதுதான் துன்பத்திலும் பெருந்துன்பம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாருக்கேனும் என்னை பிடிக்காதா..? எனும் நெருக்கடியை விட, யாருக்கும் பிடிக்கா விட்டால்தான் என்ன..?? எனும் சுதந்திரம் அழகு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!