மற்றவன் தன்னிடம் நடந்துகொள்வதால் தனக்கு மனகஷ்டமும், மனவேதனையும், துன்பமும் உண்டாகுமானால், அதைப்போன்று தானும் மற்றவனிடம் நடந்து கொள்வானாகில் அதுவே தீயொழுக்கம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எப்பொழுது முடிவுகளை நாமே எடுக்க பழகுகிறோமோ... அப்பொழுது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் நமக்குள் பிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லொழுக்கம் என்பது மிகவும் கஷ்டமான காரியம் இல்லை. ஒருவன், மற்றவன் தன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ, அதைப்போன்றே அவனும் மற்றவனிடம் நடந்து கொள்வதுதான் நல்லொழுக்கம்.!
பலமான மேடையில் பலகீனமான ஆட்டக்காரனும், பலகீனமான மேடையில் பலமான ஆட்டக்காரனும் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடியாது!! களம் அறிந்து போராடுபவனே புத்திசாலி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல நேரம்...
அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட, தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
