எவ்வளவு நாள் வாழ்ந்தீர்கள் என்பது முக்கியமல்ல, எப்படி வாழ்ந்தீர்கள் என்பதில் தான் உங்களுடைய சிறப்புள்ளது . வாழ்க்கையை சிறப்பாக வாழப்பழகுங்கள். வானும் மண்ணும் வாழ்த்திட வாழுங்கள்.!
உன் வாழ்க்கையை உன் கையில் வைத்துக்கொள். உன் வாழ்க்கையை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டு அது சரியாக இல்லை என்று சொல்வதில் அர்த்தமில்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உடம்பில் கவனம் செலுத்துங்கள் ஆரோக்கியமாக வாழலாம், மனதில் கவனம் செலுத்துங்கள் ஆனந்தமாக வாழலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அமைதியும், ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்குமென்றால் ஏதேனும் சிலவற்றை இழந்தாலும் பரவாயில்லை. இருப்பதைக் கொண்டு அவற்றோடு வாழ்ந்து விடுங்கள்.வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிடித்ததை அடிக்கடி நினைத்துக் கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும். வெறுப்பதை படிப்படியாக மறக்க முயன்றால் நிம்மதி கிடைக்கும். தீதும் நன்றும் நம்மிடம் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஊதியம் பெற விரும்பும் கல்வியை விட உயிர்வாழ உதவும் கல்வியே சிறந்தது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மூன்றாவது நபரை பற்றி பேசிக் கொள்ளாமல் எவ்வளவு நேரம் உங்களால் பேச முடிகிறதோ, அதுவே உரையாடல், மற்றதெல்லாம் நேரவிரையம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!