வாழ்க்கையில் அடைந்த துன்பங்களை மறக்கப் பழகுங்கள், கடந்து செல்லப் பழகுங்கள். அப்போது தான் அடைய வேண்டிய மகிழ்ச்சியை அடைய முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாய் மனிதனை பின் தொடரும் ஆனால் பின் பற்றுவதில்லை. அதனால் தான் இன்னும் நன்றியுடன் இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவன் சொல்படி வாழ்க்கை வாழ்ந்து முடிந்துபோகையில் உன் சொந்த வாழ்க்கை உன்னைப் பார்த்து என்னை ஏன் வாழ மறந்தாய்?` என்று கேட்கையில் மற்றவன் இருக்கமாட்டான். தோற்றவனாய் நீ நிற்பாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இன்று சிறப்பாக செயல்படுவோம். நம் செயல்களை பார்த்து நேற்றைய நாள் பொறாமை கொள்ளட்டும். ஒவ்வொரு நாளும் உற்சாகமாக செயல்படுவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வசதியான வாழ்க்கையில் நம்மைவிட சிறப்பாக பலர் வாழலாம் ஆனால் நம் வாழ்க்கையை நம்மைவிட சிறப்பாக யாராலும் வாழ முடியாது.!
அந்தந்த நொடியை மகிழ்வாக, அழகாக, ஆரோக்கியமாக, இனிமையாக நேர்மையாக வாழப்பழகுங்கள். அடுத்த நொடியைப்பற்றி கவலைப்படாதீர்கள். அடுத்த நொடி என்பது கானல் நீர் போன்றது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இருக்கும்போது சிலருடைய அருமை பலருக்கு புரிவதில்லை, இறந்த பின்பும் சிலருடைய அருமை பலருக்கு புரிவதில்லை. காலம் கடந்து தான் சிலருடைய அருமை பலருக்கு புரிகிறது, புரிந்தும் அப்போது பயனற்றதாகி விடுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நினைப்பதை எல்லாம் தடையேது மின்றி நடத்திக்காட்டும் ஆளச்சிறந்த சக்தி கனவுகள். கனவு காணுங்கள்.
