உலகம் முழுவதும் இன்று வனவிலங்குகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இன்றைய சூழலில், தோலுக்காக புலிகள், இறைச்சிக்காக மான்கள், தந்தத்திற்காக யானைகள் என மனிதனால் விலங்கள் வேட்டையாடப்படுகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணரும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தபப்டுகின்றன.
நாட்டின் வேலியாய் விளங்கும் காடுகளையும், விலங்குகளையும் காப்பது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவோம்.!
Share :
Tags :