இயல்பாகவே வெட்டுக்கிளிகள் தனிமை விரும்பிகள். இரவாடி. பொதுவாக இரண்டு வெட்டுக்கிளிகள் இணைவது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே. கூட்டமாக சுற்றுவது அதன் இயல்பு அல்ல. ஆனால் செரோடோனின் என்ற ஹார்மோன் சுரக்கும் போது இதன் குணங்களில் பெரும் மாற்றம் நிகழ்கிறது.
6 செமீ நீளம் நான்காக குறுக்கப்படுகிறது. அதன் வண்ணங்களில், தோற்றத்தில், உடற்செயலில், நடத்தைகளில் மாற்றம் நிகழ்கிறது. இதன் மூலம் தனியாகத்திரிந்தவைகள் கூட்டமாக சேர ஆரம்பிக்கிறது. ஒரு கூட்டம் இன்னொன்றோடு, பின் மற்றதோடு என பெருங்கூட்டமாக இணைந்து பயிர்களை துவம்சம் செய்யத்துவங்கிவிடுகிறது. இந்த நிகழ்விற்கு ஆங்கிலத்தில் ஸ்வார்மிங் என்று பெயர்.
ஆராய்ச்சிக்கூடங்களில், கணினி நிரல்களோடு சோதனை மேற்கொண்டதில் வெட்டுக்கிளியின் பின்னங்காலில் HIND FEMUR ல் ஏற்படும் தூண்டுதல் காரணமாக இது நிகழ்வதாக கூறுகிறார்கள். தனித்து இருக்கும் போது அதிக வெட்கப்படுவதாகவும், கவரும் வண்ணத்துடன் இருக்கும் இவைகள் க்ரெகரியஸ் நிலையில் கூட்டமாக சேர்ந்து பல மாற்றங்களை அடைகிறது. இந்நிகழ்வு வெட்டுக்கிளிகள் அடர்வைப்பொறுத்து அமைகிறது.
460 சதுர மைல்களுக்கு பரவும் வல்லமை படைத்தது. கிட்டத்தட்ட 400 லிருந்து 800 லட்சம் வெட்டுக்கிளிகள் இருக்கும். ஒவ்வொரு வெட்டுக்கிளியும், ஒவ்வொரு நாளும் தனது எடைக்கு நிகராக தாவரங்களை உண்ணும். அப்படியென்றால் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒவ்வொரு கூட்டமும் சுமாராக 430 மில்லியன் பவுண்டுகள் உணவை காலி செய்துவிடும். ஒப்பீட்டளவில் 10 யானைகள் அல்லது 25 ஒட்டகங்கள் அல்லது 2500 மனிதர்கள் சாப்பிடும் அளவை ஒரே நாளில் தின்று தீர்த்துவிடும். இந்நிகழ்வு 10 வாரங்கள் கூட நீடிக்கலாம்.
போன வருடம் பாகிஸ்தான் வழியாக இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம் வந்து வேளாண் நிலங்களை வெச்சு செஞ்சது. மகாராட்டிரம் வரை இதன் தாக்கம் இருக்கும். இந்த வருடமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
No. of Trees Planted