விரும்பக் கூடியவை வெறுக்கக் கூடியவை என்றெல்லாம் எதுவும் கிடையாது! தன் தேவையை பூர்த்தி செய்யுமாயின் அவை விரும்பப் படுகின்றன! அவ்வாறு இல்லை யெனில் அவை வெறுக்கப் படுகின்றன. அவ்வளவுதான்!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரும் இங்கு யாரையும் மாற்ற இயலாது. மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் நாமே முழு நிறைவானவர்கள் இல்லை. நமக்கு சிலர் நிறைவானவர்களாகவும், சிலர் குறைவானவர்களாகவும் தெரிவது போல் தான் நாமும் சிலர் கண்ணுக்கு நிறைவானவராகவும், மற்றும் சிலர் கண்ணுக்கு குறைவானவராகவும் தெரிவோம். அதில் ஒன்றும் குறையில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை, ஆனால் வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரி யாவது தேவை.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடவுளிடம் வேண்டிக் கிட்டு காணிக்கை செலுத்தியது தான் உலகின் முதல் லஞ்சம். அதையும் அவர் ஏற்றுக்கிட்டு நிறை வேற்றாமல் போனதுதான் உலகின் முதல் ஊழல்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கென ஓர் அறிவு இருக்கிறது. அது நம் உபயோகத்திற்குத் தான் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதை நாம் உபயோகித்து வாழ்ந்தால் மட்டுமே நாம் வாழலாம். இல்லை யெனில் மற்றவர் வாழ நாம் உபயோகப் படுவோம் அவ்வளவுதான்.!
அன்னைக்கு புழுவா இருந்தப்ப ச்சீன்னு சொன்ன அதே வாய் தான், இன்னைக்கு பட்டாம்பூச்சியா பறக்கும் போது வாவ்ன்னு சொல்லும். அதனால மத்தவனுக்காக வாழாம, நமக்காக மாறுவோம்!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒன்றி வாழ ஒத்தக் கருத்துக்கள் அவசியமில்லை! ஒருவரின் கருத்தை இன்னொருவர் மேல் திணிக்காமல் இருப்பது மட்டுமே அவசியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்முடைய தவறுகளுக்கு மற்றவர்களைக் காரணம் சொல்லிக் கொண்டிருந்தால் வெற்றி நம்மை தேடி வர வெகு காலம் ஆகும். காரணங்கள் சொல்லாமல் காரியங்கள் செய்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
