தலைமூழ்கிக் குளித்தபின் உடலில் எண்ணை பூசக்கூடாது என்பது ஏன் ?

தலைமூழ்கிக் குளித்தபின் உடலில் எண்ணை பூசக்கூடாது என்பது ஏன் ?

 

தலைமூழ்கிக் குளித்தபின் உடலில் எண்ணை பூசக்கூடாது என்பது ஏன் ?

உடல் முழுவதும் எண்ணை தேய்த்து அழுத்தித் தடவும் போது நாம் உணராமலே ` மஸாஜிங் ` நடக்கின்றது . இது இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகின்றது . உடலின் எந்த பாகமும் நோய்வாய்ப்படுவது அப்பாகத்தில் இரத்த ஓட்டம் குறையும் போது தான் என்பது பண்டைக் காலத்திலேயே புரிந்து கொண்டிருந்தனர் . மேலும் உடலில் எண்ணை தேய்த்த பின் வியர்ப்பது உடல் செயல்பாடுகளைப் பாதிக்கும் என்பதும் கண்டறிந்துள்ளனர் . சருமத்திலுள்ள வியர்வை துவாரங்கள் எண்ணை தேய்க்கும் போது அடைந்து போவதால் உடலிலுள்ள அசுத்தங்கள் சரியானபடி வெளியாக முடியாமல் போகும்.

தலைமூழ்கிக் குளித்த பின் எண்ணை தேய்த்தால் தூசி அழுக்கு போன்றவை உடம்பில் படிந்துவிடுவதுடன் உடலினுள் இருக்கும் மாசுகள் வியர்த்து வெளியேறாததனால் சிறுநீரகத்தின் வேலைப்பழு அதிகரிக்கும் . தலையில் தேய்க்கும் எல்லா எண்ணை களும் உடலிலும் தேய்க்கலாம் . ஆனால் உடலில் தேய்க்கும் எண்ணைகள் எல்லாம் தலைக்கு சரிவராது என்பதையும் கவனிக்கவும் . முடி கொட்டுதல் , அகாலநரை என்பவை தவிர்க்க , தலையில் எல்லா எண்ணைகளும் தேய்ப்பது சரியல்ல.

Source By : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்.

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Write Feedback