மனித குல வளர்ச்சியும் / பருவ நிலை மாற்றமும்
1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெரு வெடிப்பில் உருவான சூரியக் குடும்பத்தில் இருந்து 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது பூமி. முதல் உயிர் தோன்ற 70 கோடி ஆண்டுகள் பிடித்தது. அதாவது சுமார் 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செல் உயிரினங்கள் தோன்றின. அதன்பிறகு பலகட்ட பரிணாம வளர்ச்சிகள் நடந்து பல லட்சம் உயிரினங்கள் உருவாகி, மாண்டு நிலையில்லா வானிலை, பருவநிலையை கடந்து 5 முறை பேரழிவை சந்தித்த இந்த பூமி கடந்த 11500 ஆண்டுகளுக்கு முன்புதான் சமநிலையை அடைந்தது. இந்த காலத்தை Holocene period என்பர். சீரான வெப்பம், பருவநிலை, வளமான உயிர் சூழல் என அனைத்திலும் நிலையான ஒரு கட்டத்தை அடைந்த தருணம். பூமியின் பொற்காலம் என்றும் கூறலாம். ஆனால் இந்த பூமியில் உருவான ஒரு உயிரினம் அனைத்து உயிரினங்களையும் அடக்கி தனக்கு ஏற்றார் போல் சுற்றுச்சூழலை மாற்றி அமைத்து இயற்கைக்கே சவால் விடும் அளவுக்கு மிதமிஞ்சிய கர்வத்துடன் வலம்வருகிறது. அவர்களுக்கு அவர்களே வைத்துக்கொண்ட பெயர் மனிதர்கள் (Homo sapiens). 450 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த பூமியை மனித குலத்தின் வளர்ச்சி என்ற போர்வையில் வெரும் 200 ஆண்டுகளில் சூரையாடியதன் விளைவு. இன்று அனைத்து இனங்களும் உயிர் வாழ தகுதியற்ற ஓர் இடமாக மாறிவருகிறது பூமி, 6-ம் பேரழிவிற்கான ஆரம்பமாக மனிதகுலம் உள்ளது. நமது இந்த வளர்ச்சி வேட்டையில் பூமியின் 40 % காடுகள் அழிந்தன, 50 % கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தன, 68 % வன உயிரினங்கள் அழிந்தன, 84 % நன்னீர் வாழ் உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. இதுதான் அடைய துடித்த வளர்ச்சியா. இதன் விளைவுகளால்தான் கரோனா வைரஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பரவுகின்றன. மேலும் கடும் வரட்சி, வரலாறு காணாத மழை, வெள்ளம், வெயில் தாக்கம், பனிப்பாறைகள் உருக்கம், உணவு பற்றாக்குறை, கடல் மட்டம் உயர்வு போன்ற என்னற்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் மனித இனமே முழு காரணம். இனி வரும் 2021-2030 வரையிலான பத்தாண்டுகளே இந்த பூமியில் மனிதனின் இருப்பை உறுதி செய்ய மீதமுள்ள காலம். இந்த காலகட்டத்தில் நாம் நமது கரியமிலவாயு (Greenhouse gases) வெளிவேற்றத்தை குறைத்து, புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தி இயற்கையோடு இசைந்தபடி ஒரு தற்சார்பு வாழ்க்கை முறைக்கு மாறியாக வேண்டும். இதுவே நமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு.
Article By. சு.தியானேஸ்வரன்
Tags : #environment #nature #sustainability #climatechange #ecofriendly #savetheplanet #sustainable #zerowaste #gogreen #earth #recycle #naveenkrishnan #naveengarden #globalnaturefoundation #gnf #green #eco #plasticfree #sustainableliving #globalwarming #photography #love #environmentallyfriendly #pollution #climate #art #india #reuse #conservation #naturephotography #wildlife #water #ecology #recycling #climateaction #climatecrisis #covid #trees #plastic #ocean #plasticpollution #health #noplastic #travel #energy #instagood #savetheearth #life #landscape #renewableenergy #naturelovers #saveearth #waste #environmentalist #science #design #instagram #animals #tree #plants #organic #education