உலக சாரணர் தினம் - World Scout Scarf Day

உலக சாரணர் தினம் - World Scout Scarf Day

 

வருடந்தோறும் ஆகஸ்ட் 01ம் உலக சாரணர் தினம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூரும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக ஆகஸ்ட் முதலாம் தேதி என சில நாடுகளில் இத்தினம் சிறப்புத்தன்மை பெற்றாலும்கூட, ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும். 1907ம் ஆண்டு ஜுலை மாதம் 28ம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும், தன்னலமற்ற மனித நேயமிக்க சேவையுணர்வை உலகில் விதைத்திட்ட `சேர். றொபர்ட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல்" என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும், சாரணியப் பாசறையும், ஆகஸ்ட் முதலாம் தேதி தொடக்கம் ஆகஸ்ட் ஆறாம் தேதி வரை நிகழ்ந்தது.. எனவே, முதலாவது சாரணிய இயக்கப் பாசறை நடைபெற்ற தினத்தை அடிப்படையாகக் கொண்டே உலக சாரணியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

 

சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சிக்களமாகக் கல்விச்சாலைகளில் மாணவ, மாணவியர்களுக்கான சாரணர் இயக்கம் உலகளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது. வயது வந்தோர்க்கான கல்வி, சாலை விதிமுறைகளை மேற்கொள்ளுதல், விழா நடைபெறும் காலங்களில் கூட்டத்தினைக் கட்டுப்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற பணியினைச் சாரணர் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

 

1910ல் சாரணியம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. தற்போது உலகில் சாரணர் சங்கங்கள் 216 நாடுகளில் செயல்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடுதலான நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனமாக சாரணர் அமைப்பு விளங்குகின்றது. உலகம் முழுவதிலும் 38 மில்லியன் சாரணர்கள் உள்ளனர். ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 18 மில்லியன் சாரணர்கள் உள்ளனர் எனபுள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன..

 

1912ல் உலக சகோதரத்துவத்தை வளர்க்கும் தூரநோக்கில் உலகப் பயணத்தை பேடன் பவல் மேற்கொண்டார். இதேவேளை அவரது பாரியார் சீமாட்டி `ஒபேவா பேடன் பவல்" 1910ல் பெண்கள் சாரணியத்தை ஆரம்பித்து உலகெங்கும் வியாபிக்க வழிகோலினார். 1916ல், குருளைச் சாரணர் இயக்கமும், 1918ல் ரோவர்ஸ் சாரணர் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இன்று சாரணியர் இயக்கமும், பெண்கள் சாரணிய இயக்கமும் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றன. இவை எதிர்காலச் சமூகத்திற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. உலக சகோதரத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட சாரணியத்தின் மூலமாக உலக நாடுகளில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்புதல் வேண்டும், என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகும்.

 

 

The idea of `World Scout Scarf Day` on August 1 is that all active and former scouts are requested to wear their scout scarfs in public to make the `spirit of scouting` visible: once a scout - always a scout!

Learn about World Scout Scarf Day

The idea behind Scout Scarf Day is that all former and active scouts are prompted to wear their scout scarfs out in public so that the spirit of scouting is there for all to see! After all, once a scout, always a scout, right? The scarf is just a symbol, but it is a very strong symbol regarding the scout promise and the scout’s mission to leave the world a better place than the place we had found it.

 

The scout’s scarf or neckerchief is part of the uniform. They are highly practical. For example, they can be used as a bandage or a sling by a Scout in need. Depending on the title, organization, and region, the neckerchiefs that are used can have different emblems and colors. A special knot is used to tie the scarf; these are known as the Friendship knots. The decorative knot comes from China and it has become highly popular among Scouts in recent times. It omits the use of a woggle.

 

History of World Scout Scarf Day

This scoutful holiday was created through a collaboration of Scout groups worldwide since 2007. It encourages current and former scouts to wear their scarves in pride as a symbol of the Scout’s promise and the spirit of Scouting. The Scout’s promise is about being in the spirit of upholding Scout law, which includes being loyal, trusted, helpful to others, and obeys orders. The date of the event commemorates the first scout group to be ever created, which was located on Brownsea Island in 1907.

 

This holiday is part of a collection of holidays inspired by the Scouting movement during the first half of the twentieth century, which all started when a lieutenant general of the British Army named Robert Baden-Powell wrote a book for boys about scouting, called Scouting for Boys.

 

Once this book was published in 1907, many scouting groups started appearing all throughout Great Britain and eventually the rest of the world. Specifically, since the scout scarf is a symbol of the Scout’s Promise, and for those who have pride in their Scout membership, this day is one of the perfect days for people all over the world to show off their scarfs and be proud of their Scout history.

 

On social media, there are competitions and videos from local scouting groups that show off these scarfs in the celebration to see who has the most pride.

 

Scouts around the world

Scouting started in the United Kingdom. However, there are now more than 38 million Guide and Scot members across the world, with the movement spanning 216 countries. International organizations differ across the world, with various activities, traditions, and uniforms. However, they all hold the same core values.

 

You will find the highest number of scouts in Indonesia. There are more than 17 million members of the scouting organization in Indonesia, which is called Gerakan Pramuka Indonesia. This makes it the biggest scouting organization in the world. Despite the fact that scouting originated in the United Kingdom, it only comes 9th on the list in terms of the number of Scouts. Of course, it is a smaller country!

 

You may also be surprised to learn that Boy Scouts of America only started by chance. This happened in 1909 when William Boyce, who was an American businessman, was lost in the fog of London. Thankfully, he was approached by a small boy who offered to take him to his hotel. Once he arrived at the hotel, he offered the boy some money to say thank you, however, the young boy refused it, stating that it was simply his good turn as a Boy Scout. This piqued Boyce’s intrigue, and so he learned more before he returned to America. Once he was back, he decided to set up Boy Scouts of America, and the rest is history as they say.

 

Source By : Tamiloneindia.com, daysoftheyear.com

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback