உலக தொலைத்தொடர்பு தினம் World Telecommunication Day

உலக தொலைத்தொடர்பு தினம் World Telecommunication Day

 

இன்று உலக தொலைத்தொடர்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புக்கென, முதன் முதலாக, உலக தந்தி சேவை சங்கம் கடந்த 1865ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே 1934ம் ஆண்டில் உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே – 17ம் தேதியன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது இச்சங்கம் என்றால் அது மிகையல்ல.

Write Feedback