உலக டவல் தினம் (International Towel Day)
மறைந்த ஆங்கில எழுத்தாளர் டக்ளஸ் ஆடம்ஸ் நினைவாக அவரது ரசிகர்கள் சார்பில் “உலக டவல் தினம்” கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மருத்துவர்கள் தினம், என பல்வேறு தினங்களை நாம் கொண்டாடிவருகிறோம். உலக டவல் தினம் கொண்டாடப்படுவது நம்மில் பலருக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான். ஆனால் நம்பி தான் ஆக வேண்டும். இன்று (மே 25) உலக டவல் தினம். டவலுக்கு கூடவா ஒரு தினம் என்று சிரிக்க கூடாது. டவல் நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது தெரியுமல்லவா! டக்ளஸ் ஆடம்ஸ் என்ற ஒரு ஆங்கிலேய எழுத்தாளர் இருந்தார். இவர் கடந்த 1978ம் ஆண்டு “தி ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைட் டூ தி கேலக்சி” என்ற வானொலி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். பின்னர் அதனை நாவலாகவும் எழுதினார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நாவல் சுமார் இரண்டரை லட்சம் பிரதிகள் விற்று தீர்ந்தன. இந்த நாவலில் டவலின் சிறப்பு பற்றி டக்ளஸ் எழுந்தியிருந்தார்.
உலகத்தை சுற்றி வரும்போது குளிரான இடத்தில் டவலை உடலில் சுற்றிக்கொண்டால் இதமாக இருக்கம், அழகான கடற்கரை மணலில் அதை விரித்து அதன் மீது படுத்துக்கொள்ளலாம், அதனை போர்த்திக்கொள்ளலாம், பாய்மர படகில் அதனை பாயாக பயன்படுத்தலாம், டவலை ஈரமாக்கி ஆயுதமாக பயன்படுத்திக்கொள்ளலாம், சமாதானத்துக்கான வெள்ளைக்கொடியாக பயன்படுத்தலாம் என்றெல்லாம் அவர் எழுதியிருந்தார். டவல் குறித்து டக்ளஸ் எழுதியிருந்ததை படித்தவர்கள் ரசித்தனர். தனது 49வது வயதில் எழுத்தாளர் டக்ளஸ் ஆடம்ஸ் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது நினைவாகவும், அவரை சிறப்பிக்கும் வகையிலும் அவர் இறந்து இரண்டு வாரங்கள் கழித்து ரசிகர்கள் டவல் தினத்தை கொண்டாடினார்கள். முதன் முதலாக கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி தான் முதன்முதலாக உலக டவல் தினம் கொண்டாடப்பட்டது. ஆண்டு தோறும் டவல் தினத்தை கொண்டாட ஆரம்பித்தார்கள். இன்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் டவல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
Share :
Tags :
Write Feedback
No. of Trees Planted
7
Close