கருங்கொண்டை நாகணவாய் (Brahminy starling)

கருங்கொண்டை நாகணவாய் (Brahminy starling)

 

கருங்கொண்டை நாகணவாய்  (Brahminy starling) என்பது நாகணவாய் குடும்ப பறவைகளில் ஒன்றாகும். இது பொதுவாக இரு பறவைகளாகவோ அல்லது சிறு குழுவாகவோ இந்திய துணைக் கண்டத்தின் சமவெளிகளின் திறந்த வெளிப் பகுதிகளில் காணப்படும்.
இவை வருடம் முழுவதும் நேபாளம் மற்றும் இந்தியாவில் காணப்படும் பறவைகள் ஆகும். குளிர் காலத்தில் இவை இலங்கைக்கும் மற்றும், கோடை காலத்தில் மேற்கு இமயமலை மற்றும் வடகிழக்கு இமயமலை பகுதிகளுக்கும் வலசை செல்லும் பறவைகள் ஆகும். பாகிஸ்தானின் சமவெளிப் பகுதிகளிலும் இவை காணப்பட்டுள்ளன. பெரும்பாலும் சமவெளி பகுதியில் காணப்பட்டாலும் 3000 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான பகுதிகளிலும் இவை காணப்பட்டுள்ளன. அவ்வாறு காணப்பட்ட இடங்கள் பெரும்பாலும் லடாக் பகுதியிலேயே உள்ளன.
இப்பறவை பொதுவாக உலர்ந்த காடுகள், புதர் நிறைந்த காடுகள் மற்றும் சாகுபடி செய்யப்படும் விளைநிலங்களுக்கு அருகிலேயே காணப்படும். பெரும்பாலும் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே காணப்படும். இவை பொதுவாக நீர் தேங்கிய அல்லது சதுப்பு நிலப் பகுதிகளை தேர்வு செய்து வசிக்கக் கூடியவை ஆகும். 
Photo: Raveendran Nagarajan, Madurai.

Write Feedback