செந்தலைப் பூங்குருவி (Orange-headed thrush)

செந்தலைப் பூங்குருவி (Orange-headed thrush)

 

செந்தலைப் பூங்குருவி (Orange-headed thrush) இது தென்கிழக்காசியாவின் இந்தியத் துணைக்கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படும் பறவை இனமாகும். இது பாசெரின் (Passerine) என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் மாவட்டமான ஈரோடு மாவட்டத்தின் தமிழக எல்லையும் கர்நாடக எல்லையும் சேரும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகளின் காணப்படுகிறன. மேலும் இப்பறவையினம் வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, ஆங்காங், மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன.
Photo: Raveendran Natarajan, Madurai.

Write Feedback