கருந்தலை மாங்குயில் (Black-hooded Oriole)

கருந்தலை மாங்குயில் (Black-hooded Oriole)

 

கருந்தலைமாங்குயில் (Black-hooded Orioleபறவையானது தெற்காசியாவின் இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் இருந்து இந்தோனேசியா வரை காணப்படுகிறது. இப்பறவை மைனாவின் பருமனுள்ளது. வீட்டுக் குருவியை விடப் பெரியதுஇதன் நிறம் மாம்பழம் போன்று மஞ்சள் நிறம். இறக்கைகள் கருப்பு நிறம். பெயருக்கு ஏற்றாற்போல் இந்த மாங்குயில் மாமரத்தில் தான் இருக்கும். இலங்கை தமிழில் இதனை மாம்பழக் குருவி என்று அழைப்பர். இதன் அறிவியல் பெயர் `ஓரியோலசு ஓரியோலசு`. குரல் குயிலை போன்றே இனிமை. இறக்கைகள் மட்டுமின்றி தலையும் கருப்பு நிறம். எனவே மாங்குயிலை `கருந்தலை மாங்குயில்` என்றும் அழைப்பர். பாதுகாக்க வேண்டிய பறவைகளின் பட்டியலில் இது உள்ளது .ஆல், அத்தி, அரசு போன்றவற்றின் பழங்களையும் பூச்சிகளையும் விரும்பி உண்ணக்கூடியது.

Photo: Raveendran Natarajan, Madurai. 

Write Feedback