இன்றைய உலகில் டைனோசர்கள்?

இன்றைய உலகில் டைனோசர்கள்?

 

இன்றைய உலகில் டைனோசர்கள் ... !?

1676 ம் ஆண்டு. அதாவது, கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்தில் சில ராட்சத எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. “ரொபர்ட் ப்லொட்என்கிற இயற்கையியல் ஆய்வாளரிடம் அவை அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விசாலமான எலும்பு மாதிரிகளை ஆராய்ந்த அவர், “இவ்வளவு பெரிய எலும்புகள் இன்றைய உலகில் வாழும் எந்த உயிரினத்துக்கும் இல்லை. ஆகவே, முன்னொரு காலத்தில் வாழ்ந்த உயிரினத்துக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்என்று கருத்து தெரிவித்தார். ஆனால், அது ஒரு ராட்சத மனிதனாகவோ அல்லது ராட்சத யானையாகவோ இருக்கும் என்றும் கூறினார். ஏனென்றால், டைனோசர் என்கிற உயிரினம் பற்றி அப்போது யாருமே அறிந்திருக்கவில்லை.

கிட்டத்தட்ட 1௦௦ வருடங்கள் கழித்து, “வில்லியம் பக்ளன்ட்என்கிற ஆய்வாளர், “மெகலசோரஸ்எனப்படும் விலங்கு இனத்துக்கு சொந்தமான ஒரு எலும்பு பகுதிதான் அது என்று பதிவுசெய்தார். ஆகவே, வரலாற்றில் பதிவு செய்யப்பட முதல் டைனோசர் வகையாகமெகலசோரஸ்கருதப்படுகிறது. ஆனால், இன்னும் 1௦௦ வருடங்கள் கழித்துதான், அதாவது, 1841 ஆம் ஆண்டில்தான்டைனோசர்என்கிற பொது பெயர் உருவானது.

ஆங்கிலேய தொல்லுயிரியல் நிபுணரானரிச்சர்ட் ஓவன்அதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருந்த இந்த உயிரினங்களுக்குடைனோசோரியாஎன்று பெயரிட்டார். அதன் அர்த்தம்பயங்கர பல்லிஎன்பதாகும்.

இற்றைக்கு சுமார் 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், டைனோசர் இனம் முதல் முதலாக இந்த பூமியில் தோன்றியது. சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அவை முற்றாக அழிந்து போயின. இந்த இரு காலகட்டங்களுக்கும் இடையில் உள்ள சுமார் 17 மில்லியன் ஆண்டுகால பகுதியில் இந்த ராட்சத உயிரினங்கள்தான் நமது பூமியின் ஆதிக்கம் மிகுந்த உயிரினங்களாக திகழ்ந்தன.

டைனோசர்களின் காலப்பகுதியைஜுர்ரசிக் காலம்”, “க்ரிடேஷியஸ் காலம்என்று இரு காலப்பகுதிகளாக பிரிக்கலாம். ஜுர்ரசிக் காலப்பகுதி ஆரம்ப காலமாகவும், க்ரிடேஷியஸ் காலம் இறுதி காலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. க்ரிடேஷியஸ் காலப்பகுதியின் இறுதியில் டைனோசர்கள் திடீரென்று மிக வேகமாக அழிந்து போயின. அவற்றின் அழிவுக்கு பிறகுதான். பாலூட்டிகள் என்கிற சிறு உயிரின வகைகள் வளர்ச்சி கண்டன. இதுவரையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நீரில் வாழ்ந்த டைனோசர்கள், பறக்கும் டைனோசர்கள், தரை வாழ் டைனோசர்கள் என்று அவற்றை பிரிக்கலாம்.

டைனோசர்களில் தேரோபோட்ஸ் என்று ஒரு வகை இருக்கிறது. இந்த வகை டைனோசர்கள், அதிலும் குறிப்பாக அர்கியோப்ற்றிக்ஸ் போன்ற டைனோசர்கள் பறக்கும் ஆற்றலை கொண்டிருந்தன. இவற்றை இன்றைய பறவைகளுக்கும், ஆதிகாலத்து டைனோசர்களுக்கும் இடைப்பட்ட இனமாக கருதலாம். தோற்றத்தில் ஊர்வன இனத்தை சேர்ந்த மற்றைய டைனோசர்கள் போல காட்சியளித்தாலும், மிக நீண்ட இறக்கைகளின் உதவியுடன் இவை வானில் பறந்து திரிந்தன.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் டைனோசர்களின் மற்றைய அநேகமான இனங்கள் அழிந்து போகும்போது, இந்த பறக்கும் டைனோசர்கள் மட்டும் எப்படியோ தப்பி பிழைத்து உயிர்வாழ கற்றுக்கொண்டன. அதற்கு பிறகான மில்லியன் கணக்கிலான ஆண்டுகளில் அந்த பறக்கும் டைனோசர்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. உடலமைப்பு, அளவு, இயல்புகள் என்று அநேக மாற்றங்களுக்கு அவை ஆளாகின. ஆனால், அவற்றின் தனித்துவமான பறக்கும் இயல்பு மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. அதன் விளைவாகத்தான் இன்றைய பறவைகள் தோற்றம் பெற்றன. ஆகவே, அடுத்த தடவை நீங்கள் ஒரு பறவையை காணும்போது, டைனோசர் இனத்தின் ஒரு சந்ததியைத்தான் காண்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Source By : facebook.com/அறிவியல்

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Write Feedback