சித்தர்கள் என்பவர் யார்?

சித்தர்கள் என்பவர் யார்?

 

 மருத்துவக்கலை, ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றாகவும் அறக்கொடைகள் முப்பத்திரண்டில் ஒன்றாகவும் சிறப்புடன் திகழ்கின்றதுபண்டைக்கால தமிழர்களின் இலக்கியங்களிலும் வாழ்வியலிலும் இக்கலை கலப்புற்று காணப்படுகின்றதுஇம்மருத்துவக்கலையினை ஆராய்ந்து ஆவணப்படுத்தியவர்கள் சித்தர்கள். ‘சித்என்பது அறிவுஎனவேசித்தர்என்பதைஅறிவர்எனக் கொள்ளலாம்.

 

        ‘மறுவில் செய்தி மூவகைக் காலமும்

        நெறியி லாற்றிய அறிவன் தேயமும்’ 

(தொல்காப்பிய புறத்திணையியல், செ.16)   

 

மேற்காணும் செய்யுளில், தொல்காப்பியர் குறிப்பிடும்அறிவர்என்பது நச்சினார்க்கினியாரின் உரையின் மூலம் பிற்கால சொல்வழக்கானசித்தர்என்பது தொல்காப்பியக்காலஅறிவர்எனும் சொல்வழக்கோடு ஒத்துள்ளதாக கருத முடிகின்றது.

 

    சித்தர்கள் சாதிசமய வேறுபாடுகளை  புறந்தள்ளிவிட்டு உயர்வத் தாழ்வுகளைக் கடந்து வாழ்ந்திருந்தனர்மேலும் பயனுடையவை எவை என பிரித்து அறிந்து நோயற்ற வாழ்வு, ஞானம் அடையக்கூடிய வழிமுறைகளை வகுத்து அறிவுறுத்திய சீர்திருத்தவாதிகளாக காணப்படுகின்றனர்சித்தர்கள் என்பவர்கள் பல்வேறு காலகட்டத்தில் பெரும் அறிஞர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், மருத்துவர்களாகவும், தத்துவஞானிகளாகவும் யோகிகளாகவும் செயல்பட்டவர்கள் எனலாம்இவர்கள் அனைத்து சமயத்தைச் சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள்இத்தகையோரை திருக்குறள்நூலோர்என்றும், புறநானூறுஅறவோன்என்றும்திருமந்திரம்’  சிந்தை தெளிந்தார் சித்தர் (பா. 1989) என்றும், சிவவாக்கியர்விகாரமற்ற ஞானிகள்’ (398) என்றும் கூறுகின்றன.

 

    மேலும் இயற்கை மருத்துவம், பாட்டி வைத்தியம், நாட்டு மருத்துவம், தமிழ் மருத்துவம் என்றெல்லாம் வழங்கி வந்த மருத்துவக்கலையை சித்தர்கள் ஆராய்ந்து ஆவணப்படுத்தி பயிற்றுவித்து வந்தமையால்சித்த மருத்துவம்என்று 1924-ஆம் ஆண்டு பனகல் அரசரால் பெயரிடப்பட்டு கல்வி  முறையாக பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது.

Article By: Dr Shailaja R


 

Write Feedback