அன்னையர் தினம்
இன்று மே 10ம் தேதி, அன்னையர் தினமாகும்..
அம்மா... இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம்... அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother`s Day) ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.
`தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை. ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் `அன்னை` என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
Source By : https://tamil.oneindia.com/
Article By :
Naveen Krishnan, Thuraiyur.
Tags : #அன்னையர்தினம் #mothersday #mothersdaygift #love #happymothersday #mom #mother #family #motherhood #gift #momlife #mothersdaygiftideas #flowers #mothers #shoplocal #handmade #mothersdaygifts #giftideas #mama #fathersday #birthday #gifts #stayhome #covid #instagood #happy #mum #art #anniversary #instagram #quarantine #giftsforher #mommy #photography #motherslove #momsofinstagram #jewelry #beauty #staysafe #photooftheday #may #cake #motherdaughter #spring #like #beautiful #moms #muttertag #graduation #bouquet #motherlove #giftsformom #diadelasmadres #baby #food #naveengarden #naveenkrishnan #farmhouse #farmstay #o2zone #villagelife #10may2021 #may10
No. of Trees Planted