இட்லி வரலாறு

இட்லி வரலாறு

 

பொதுவாக தென்னிய உணவாக கருதப்படும் இட்லிக்கு பெரிய வரலாறே உள்ளது. ஒவ்வொரு நாட்டினரும் தங்களது பாரம்பரிய உணவு என்று இட்லியை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்..

 

ஆனால், இட்லிக்கு சொந்தக்கார நாடு எது என்பது குறித்து பார்க்கலாம்

 

இட்லிக்கு பெரிய வரலாறே உள்ளது. ஆவியில் வேக வைத்து உண்ணப்படும்  உணவான இட்லி குறித்து கி.பி., 920ம் ஆண்டிலேயே  கன்னட மொழியில் எழுதப்பட்ட ‘வத்தாராதனை என்ற நுாலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

கி.பி., 1130ல் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நுாலிலும் இட்லி பற்றி குறிப்பிட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

 

அதுபோல, 12ம் நூற்றாண்டில்,  குஜராத்தில் இந்து தமிழகத்திற்கு வணிகம் செய்ய வந்த துணி வியாபாரிகளே, தென்னகத்தில் இட்லியை அறிமுகப்படுத்தியதாக ஒருசிலர் கூறி வருகின்றனர்.

 

ஆனால், இவை அனைத்திற்கும் மேலாக  இட்லி என்ற உணவு இந்தோனேஷியாவுக்கு சொந்தமானது என்று  உணவு வரலாற்றாசிரியர் அசயா என்பவர் கூறி உள்ளார்.

 

இவ்வாறு பல தரப்பினர் இட்லிக்கு சொந்தம் கொண்டாடி வந்தாலும் இன்று உலகம் முழுவதும் இட்லிக்கு தனி மவுசு உண்டு.

 

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேக வைத்து செய்யப்படு கிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக் என்பதாகும்.

 

பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அனைத்து உணவுகளுக்கும் தாய் இட்லி என்று ஒரு பேச்சு உண்டு. உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லிக்கு தனி இடம் கிடைக்கும்.

 

தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெறும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.

 

உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லிக்கு தனி இடம் கிடைக்கும்.

 

காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி.  எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் மிக விரைவிலேயே ஜீரணமாகி விடும்.

 

எனவே நோயாளிகளுக்கு சிறந்த உணவாக  இட்லி பரிந்துரைக்கப்படுகிறது.

 

தமிழர்களின் அன்றாட உணவில் இட்லி ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. என்னதான் நவ நாகரீக உணவுகளை நாம் தேடி தேடி சாப்பிட்டாலும் இட்லிக்கு ஈடு இணையே இல்லை எனலாம். ஆவி பறக்கும் இட்லியை, சாம்பாரில் முக்கி, சட்னியில் தடவி சாப்பிடும் சுவை…….ஆஹா.. அலாதியானது.

 

Source By : https://www.patrikai.com/

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close