ஒலி மாசு

ஒலி மாசு

 

நகரமயமாதலின் பெருங்குறைகளில் ஒன்று ஒலி மாசு. ஒலி மாசு  மனரீதியாகவும் நம்மைச்சிரமப்படுத்தும். ஒலியே இல்லாத இடத்தில் நம்மால்   குடிபோகமுடியுமா என்பது தெரியவில்லை. கானகமாயிருந்தாலும் கூட  நதியின் சலசலப்பு, பறவைகளின் ஒலி, மரங்களின் அசைவு, பூச்சிகளின்  ரீங்காரம்  என்று குறைந்த ஒலி இருந்து கொண்டுதான் இருக்கும். பூப்பூக்கும்  ஓசையை  எல்லாம் கேட்டுவிடமுடியாது. அது கவிஞர்களின் கவிதை மயக்கம்.

 

ஆனால் ஒலியே இல்லாத இடமும் உலகத்தில் இருக்கிறது. பில்கேட்சின்   மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒலியை, கணினி கருவிகளை சோதனை  செய்வதற்கென்றே பிரத்யேகமாக ஒலிபுகாத, ஒலி எதிரொலிக்காத ஒரு  அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் பெயர் B87 எனும்  எதிரொலிக்காத அறையை மைக்ரோசாப்டின் தலைமையகமான வாஷிங்டன் நகரின் ரெட்மொன்டில் உருவாக்கியுள்ளனர்.

 

கான்கிரீட், ஸ்டீல் கொண்டு வெங்காய தோலினைப்போல அடுத்தடுத்த  அடுக்குகளாய் ஸ்பிரிங்கின் மேல் அமைத்து கட்டியிருக்கிறார்கள்.   இவ்வமைப்பு அதிர்வுகளையும் தடுக்கும்.

 

2015 வரை அந்தத்தகுதியை மினியாபொலிஸ் நகரின் (பிளாய்டு காவலர் ஒருவர் கழுத்தில் மண்டியிட்டதால் மூச்சுத்திணறுகிறது என்று கடைசியாகச் சொன்னாரே அதே நகரம் தான்!) ஆர்ஃபீல்டு ஆய்வகத்திலுள்ள இந்த  அமைப்புக்கு அந்தப்பெருமை இருந்தது.

 

2013 ல் ஒரு ஆய்வு நடந்தது. அதன்படி அதீத நிசப்தம் நம் மூளையில் புதிய  செல்களை உருவாக்குமாம். ரத்த அழுத்தத்தைக்குறைக்குமாம். உலக சுகாதார அமைப்பு ஒலி மாசுக்களை நவீன பிளேக் என்று வரையறுக்கிறார்கள். சத்யராஜ் படத்துல ஒரு பாட்டு வரும்! எங்கே நிம்மதி நிம்மதி என்று  தேடிப்பார்த்தேன் அது எங்கேயுமில்லே! இனி அப்படி சொல்லிவிட முடியாதுரெட்மொன்டின் B87 க்கு  ஒரு விசிட்டடிங்க! உங்க இதய ஒலியை, நடக்கும் போது எலும்புகள் உராயும் சத்தத்தைக்கூட உங்களால் கேட்டுவிட முடியும். உங்களால் எவ்வளவு நேரம்  இருந்துவிடமுடியும் என்பது தெரியவில்லை!

 

Article By : Sundaram Dinahran, Madurai. 

Write Feedback