உலக இட்லி தினம்

உலக இட்லி தினம்

 

உலக இட்லி தினம் :

தென்னிந்தியாவின் மிக முக்கிய உணவாக இட்லி இன்றும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் சத்தான உணவாகவும் எளிதில் செரிமானமாகும் உணவாகும் இட்லி திகழ்கிறது. இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டவரும் இப்போது இட்லிதான் சிறந்த சத்தான உணவு என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். எல்லா முக்கிய விஷயங்களுக்கும் உலக தினம் இருப்பது போல், ஆண்டுதோறும் மார்ச் 30-ம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெரும்பாலானவர்களுக்கு அன்றாடம் இட்லி தினம்தான். ஆனால், நேற்று இந்திய அளவில் ஹேஷ்டேக்கில் உலக இட்லி தினம் மிகப் பெரும் வரவேற்பை பெற்று ட்விட்டர் பயனாளிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உலக இட்லி தினம் சென்னையைச் சேர்ந்த இனியவன் என்பவரின் எண்ணத்தில் உதித்தது என்கின்றனர். அவர் இட்லியை மட்டும் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு 1,328 வகையான இட்லிகளை தயாரித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார். அத்துடன் 44 கிலோ இட்லியையும் தயாரித்து உலகளவில் மார்ச் 30-ம் தேதியை அனைவரும் உலக இட்லி தினமாக கொண்டாடுவதைத் தொடங்கி வைத்துள்ளார்.

Source By : https://www.hindutamil.in/

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Write Feedback