காந்தமலையின் அதிசயங்கள் - Mysterious Magnet Hill

காந்தமலையின் அதிசயங்கள் - Mysterious Magnet Hill

 

உலகம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமானஅங்கீகரிக்கப்பட்ட ஈர்ப்பு மலைகள் உள்ளன. காந்தமலை என்பது இந்தியாவின் காசுமீர் மாநிலத்தில் இலே என்னுமிடத்திலிருந்து இலடாக்கு செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு மலையாகும். அவ்வழியில் செல்லும் வண்டிகள் அம்மலை இருக்கும் திசை நோக்கி ஈர்க்கிறது என நம்பப்படுகிறது. ஆதலால் இம்மலை காந்தமலை எனப் பெயர்பெற்றது. கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் இந்தக் காந்தமலை அமைந்துள்ளது. இலே மற்றும் இலடாக்குக்கு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இம்மலையைப் பற்றிய அறிவிப்புப் பலகையும், அதன் அருகில் சாலையில் குறியிட்டும் வைத்துள்ளனர். இந்த குறிப்பிட்ட பகுதியில் மகிழுந்தையோ அல்லது வேறு எந்த ஓர் ஊர்தியையோ நியூட்ரல் கியரில் நிறுத்தினால் ஊர்தி காந்தமலை இருக்கும் திசைநோக்கி தானாக நகர்கிறது. பொதுவாக மலைச்சாலையில் வண்டிகள் இறக்கமான பகுதியை நோக்கி நகர்வது வழக்கம் ஆனால் வண்டி மேடான பகுதியில் 10 கி.மீ முதல் 20 கி.மீ வரை வண்டியின் எடைக்கு ஏற்றவாறு தானாக காந்தமலை இருக்கும் திசைநோக்கி பயணிக்கிறது. இதுவே அம்மலையின்

Write Feedback