கிரகணங்கள் குறித்த சில சுவரசியமான மூடநம்பிக்கைகள்

கிரகணங்கள் குறித்த சில சுவரசியமான மூடநம்பிக்கைகள்

 

கிரகணங்கள் குறித்த மூடநம்பிக்கைகள் காலங்காலமாக மேலும் தீவிரமாகச்சொல்லப்பட்டுவருகிறது. சில சுவரசியமான மூடநம்பிக்கைகளை பார்க்கலாம்.

     கிரகணத்தின் போது தெய்வ சிலைகளைத்தொட்டு வணங்குதல் கூடாது.  

     கங்கை நீரைக்கொண்டு கடவுளர்களை புனிதப்படுத்தலாம்.  

     கிரகணத்தின் போது மந்திரங்கள் சொல்லனுமாம்! ஒளியை ஒலியை வைத்து விரட்ட முடியுமா என்ன?

     கிரகணத்திற்கு முன்னரே சாப்பிட்டாக வேண்டுமாம்! சமைக்கக்கூடாதாம்! அப்படியே மீந்துவிடும்பட்சத்தில் துளசி இலைகளை உணவின் மேல் தூவி வைத்தோமானால் உணவு புனிதப்பட்டுவிடுமாம்! - பாவம் கருவேப்பிலை?

     கிரகணத்தின் போது - சாப்பிடக்கூடாது, தூங்கக்கூடாது.

     கிரகணத்திற்கு பின் கண்டிப்பாக குளிக்கவேண்டும். ஆடைகளை கழுவ வேண்டும் - ஒளியை கழுவ முடியுமா என்ன? ஃபன்னி கய்ஸ்!

     கர்ப்பிணிப்பெண்கள் மிகவும் பலவீனமாக இருப்பார்களாம். அதனால் தீயசக்திகள் பீடித்துவிடுமாம் - அப்புறம் கால் மேல் கால் போட்டுக்கூட அமரக்கூடாதாம்! - கிரகணம் என்ன மாமியாரா? என்னமா யோசிக்கிறாய்ங்க? கககபோ!

     கங்கையில் குளித்தோ இல்லை கங்கை நீரை தலையில் தெளித்தோ இதையெல்லாம் நிவர்த்தி பண்ணலாமாம் - அப்படித்தெளித்தீர்களெனில் சரும நோய் வரலாம் - கவனம்!

மேலே குறிப்பிட்ட எதுவும் நடக்கப்போவதில்லை!

அதற்காக கிரகணம் பார்க்கிறேன் என்று நேராக சூரியனை பார்த்துவிடாதீர்கள்! விழித்திரை பாதிக்கப்படலாம்! எனவே பாதுகாப்பான சூரிய கிரகணத்தைக்காண்பதற்கென்றே தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளைக்கொண்டு பார்ப்பது நலம்

 Article By : Dr.Sundaram Dinakaran, Madurai.

Write Feedback