தேனீக்களுக்கு தேன் இருக்கும் இடம் எப்படி தெரிகிறது ?

தேனீக்களுக்கு தேன் இருக்கும் இடம் எப்படி தெரிகிறது ?

 

தேனீக்களுக்கு தேன் இருக்கும் இடம் எப்படி தெரிகிறது ?

ஒரு தேனீக்கு தெரியும் இடத்தினை மற்றைய தேனீக்கள் எவ்வாறு அறிந்துகொள்கின்றன ? அவற்றுக்கிடையே ஏதும் தொடர்பாடல் இருக்குமா ? – இந்த கேள்விகள் பல நூற்றாண்டுகளாக ஆய்வாளர்களின் மூளையை குழப்பியது. உண்மையை அறிந்துகொள்ள அவர்கள் ஒரு ஆய்வினை செய்தார்கள்.

தேன் கூட்டுக்கு இரண்டு எதிரெதிர் திசைகளில் இலகுவாக தேனை பெறக்கூடிய இரு பாத்திரங்களை அவர்கள் வைத்தார்கள். அந்த பாத்திரத்தில் இருந்து தேனை எடுத்து சென்ற தேனீக்களுக்கு இரண்டு வெவ்வேறு நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்டன. ஆகவே எந்த திசையில் இருந்து அவை தேனை பெற்றன என்பது தெரியவந்தது.

கூட்டினை வந்தடைந்த தேனீக்கள் ஒரு அதிர்வு ஆட்டத்தில் ஈடுபட்டன. தமது உடலை அதிர்வடைய செய்தவாறு அவை ஒரு வகையான அசைவினை மேற்கொண்டன. இந்த ஆட்டமானது, ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்தது. அதாவது, எந்த திசையிலிருந்து அவை தேனை பெற்றன என்பதை பொறுத்து, அதன் அசைவும் மாறுபட்டது. அவதானங்களின் ஊடாக அந்த அதிசயத்தை அவர்கள் கண்டறிந்தார்கள்.

சூரியனுக்கு எந்த பக்கமாக அல்லது எந்த கோணத்தில் தேன் இருக்கிறது என்பதையும், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் இந்த அசைவின் மூலம் அவை சரியாக வெளிக்காட்டின. தேனீ அசையும் திசை, கோணம், மற்றும் தூரம் போன்றவற்றை வைத்து, மாற்றிய தேனீக்கள் இடத்தை அறிந்துகொள்கின்றன.

Source By : facebook.com/அறிவியல்-உலகம்

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Write Feedback