பனை கருப்பட்டி பற்றி ஒரு சிறப்பு பார்வை !!!

பனை கருப்பட்டி பற்றி ஒரு சிறப்பு பார்வை !!!

 

பனை கருப்பட்டி பற்றி ஒரு சிறப்பு பார்வை !!!

1) சில நயவஞ்சகர்கள் பனை பாளை பாலில் அவர்களுக்கே தெரிந்த சதவீதத்தில் சீனி சர்கரையை கலந்து காய்ச்சி விற்கப்படும்.

2) சில கோல்மால் செய்தே பழக்கப்பட்ட வணிகர்கள் பனை பாலுடன் கரும்பு சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளான மொலசஸ் சேர்த்து பனை கருப்பட்டி தயாரிக்கபடும்.

3) தரமற்ற இனிபூட்டிகளான சாக்ரீன் போன்ற தரமற்ற பொருட்கள் கலப்படம் செய்ய பட்டு விற்கப்படும்.

4) சில பண முதலைகள் தரமற்ற பிஞ்சு பனை பாளைகளில் இருந்து பால் எடுக்கப்பட்டு அதனை கொண்டும் பனை கருப்பட்டி தயாரிக்கபடுகிறது.

5) இராசயன மணமூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்க படுகிறது .

தரமான பனை கருப்பட்டியை எவ்வாறு கண்டறிவது ???

1) கலப்படமற்ற கருப்பட்டியை காற்றோட்டமாக வெட்டவெளியில் வைக்க இயலாது !! வைத்தால் அது மாவு போல் ஆகிவிடும்.

2. கலப்படமற்ற கருப்பட்டியை காற்றோட்டமாக வெட்டவெளியில் ஒரு வாரம் வரை  வைத்தால் அது புளித்த வாடை வீசும். தரமற்ற கருப்பட்டியோ வெல்ல பாகு போல் கரைந்து ஓடும்.

3) கலப்படமற்ற கருப்பட்டி துண்டை உடைத்து நமது நாவில் வைத்தால் அது எக்ஸ்லர்ஸ் சாக்லேட் போல் நமது நாவில் கரையும் அதாவது திருநெல்வேலி அல்வா போல் உருகும் ஆனால் தரமற்ற கருப்பட்டியை நாவில் வைத்தால் அது மிட்டாய் போல் மெதுவாக கரையும்.

ந.சண்முக சூரியன்

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்

ஆலோசனை பெற : +91 8760503174,, +91 9344465679,

Write Feedback