ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்தி கொள்வதை விட அனைத்தும் நமக்கான பாடம் என்று அதை அனுபவமாய் எடுத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை சிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பரபரப்பாக இருந்தாலே பாதி சோகம் கண்ணுக்கு தெரியாது, சுறுசுறுப்பாக இயங்கினாலே எந்த சோகமும் நெருங்கி வராது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இன்று வரும் துன்பங்களைக் கண்டு நீ ஓடி ஒழிந்தால் நாளை வரவிருக்கும் இன்பங்களை யார் வரவேற்பது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவுரையையும் அளவாய் கொடுங்கள் .. ஏனெனில் அவரவர் வாழ்க்கையும் வேறு .. அவரவர்கள் வலிகளும் வேறு !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யார் என்ன சொன்னாலும் நமக்கு பிடித்ததை போல் வாழ்வதில் தான் இருக்கிறது நமக்கான அடையாளம் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறருடைய மனதை கவர்வது நம்முடைய அறிவோ அழகோ அல்ல, நாம் பழகும் விதமும் பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான் அமையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள். அதில் நீங்கள் தோற்றால் , ஒரு நண்பனை இழப்பீர்கள் ... ஜெயித்தால் , ஒரு எதிரியை பெறுவீர்கள் .. !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது . முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இதுவரை பெறாத ஒன்றை நீங்கள் அடைய விரும்பினால் , இதுவரை செய்யாத விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யார் சொல்வது சரியென்பதல்ல முக்கியம் . எது சரியென்பதே முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணத்தை அதிகம் பெற்றவர்கள் எல்லாம் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் என்றில்லை,. நிம்மதியை அதிகமாக பெற்றவர்களே வாழ்வில் வெற்றி பெற்றவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!