யாரையும் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். ஒவ்வொரு சாதாரண மனிதனுக்குள்ளும் அறிவும் ஆற்றலும் ஒளிந்திருக்கிறது. அது வெளிப்படும் போது அவன் உச்சத்தில் இருப்பான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயற்சியில் வரும் தவறுகள் பிழையில்லை, தவறு வருமோ என்று முயலாமல் இருப்பதே மிகப் பெரிய பிழை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிறந்த மனிதனை வெளியில் தேடாதே, உன்னை விடச் சிறந்த மனிதன் இவ்வுலகில் இல்லவே இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதீர் உங்கள் மனநிறைவுக்காக உங்களுக்கு பிடித்ததை பெருமையோடு செய்யுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எத்தனை நீச்சல் கற்றுக் கொண்டாலும், கஷ்டங்கள் வரும்போது எதிர்நீச்சல் போடவும் நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மனதை கட்டுப் படுத்தினாலே போதும் எத்தனையோ பிரச்சனைகள் வராமல் தடுத்துவிடலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆகச்சிறந்த ஒவ்வொரு அறிவாளியும் நூலுக்குச் சமம். ஆகச்சிறந்த ஒவ்வொரு அனுபவசாலியும் நூலகத்திற்குச் சமம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலவற்றை புரிந்து கொள்வதற்கு அறிவு தேவை. ஆனால் அவற்றை உணர்ந்து கொள்வதற்கு அனுபவம் தேவை. அனுபவப்படுங்கள் வாழ்க்கையில் நிறையவற்றை அறிந்து கொள்வீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தடைகள் இல்லாத வாழ்க்கை என்று யாருக்கும் வாழ்க்கை இல்லை. தடைகளைத் தாண்டி வெற்றி பெறுகின்ற வாழ்க்கையைத்தான் பலரும் பெற்று இருக்கின்றனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் நினைப்பது போல உங்களால் இருக்க முடியாத போது, நீங்கள் நினைப்பது போல மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
