வெற்றியை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால் தோல்வியை வலிமையானவர்களால் மட்டுமே தாங்க முடியும். தோல்வியைக் கண்டு துவளாதீர்கள் வலிமையானவராக உணருங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சோற்றுக்காக தான் வேலைக்கு போகிறோம் என்று தெரிந்திருந்தும், நேரம் ஆகிவிட்டது என சாப்பிடாமல் வேலைக்கு போவது தான் பாவப்பட்ட வர்க்கம்.!
கழுகு கவ்விய பின் காலிடுக்கில் இருந்த எலி சிரித்துக் கொண்டே சொல்லியதாம், இறப்பு எனக்கு எவ்வாறேனும் நிகழும்... பறப்பதற்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி என்று. தான் இருக்கும் இடத்தை அனுபவிக்க தெரிந்தவனுக்கு எல்லா இடமும் சொர்க்கமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்னை ஆராய்வதை நான் பார்த்து கொள்கிறேன், பாவம் நீ அதனை செய்து களைப்படைய வேண்டாம், முடிந்தால் உன்னை ஆராய்ந்து பார் அதில் நீ களைப்படைந்தாலும் பரவாயில்லை அதில் தான் உனக்கான ஆதாயமும் கூட அதிகம் இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எப்போது யாருக்கு நாம் தேவையோ, அப்போது மட்டும் தான் அவர்களுக்கு பிடித்தவர்களில் நாம் ஒருவர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப் போவது மரியாதைக் குரியது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
