வாழ்க்கையில் உறக்கம் இரக்கம் இரண்டும் அளவோடு தான் இருக்க வேண்டும். உறக்கம் அதிகமானால் சோம்பேறி என்பார்கள். இரக்கம் அதிகமானால் ஏமாளி என்பார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கொடி வளர தேர் கொடுத்த பாரிக்கு கொடி நன்றி சொன்னது, தேரை உருவாக்க வெட்டிய மரம் என்ன சொல்லி இருக்கும்???.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறரிடமிருந்து தேர்ச்சி பெறுவது நல்ல பலம் தான். ஆனால் உங்களிடமிருந்து நீங்களே தேர்ச்சி பெறுவது தான் முழு சக்தி ஆகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நூற்றெட்டு தேங்காய் உடைப்பதாக வேண்டுபவர்கள் ஏன் நூற்றெட்டு தென்னங்கன்று நடுகிறேன் என்று வேண்டுவதில்லை. ஆக்கத்தை விட அழிப்பதில் என்ன நிறைவேறிட போகிறது என்று எனக்கு புரியவில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடியே படாமல் வலிக்க செய்வதும், மருந்தே இல்லாமல் காயத்தை குணப்படுத்துவதும் ஆறுதலான வார்த்தைகள் மட்டுமே. சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துவோம்.!
இதுவரை வாழ்ந்த வாழ்வை அழிக்கவும் முடியாது, இனி வாழப்போகும் வாழ்வை அறியவும் முடியாது. இன்றைய பொழுதை மகிழ்வாக வாழ்வதே சிறந்த வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கிடைத்ததை அனுபவிக்க கற்றுக் கொண்டும், கிடைக்காததை ரசிக்க கற்றுக் கொண்டும்., வாழ்ந்தால் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒன்று முக்கியம் என்றால் தோல்விக்கு அதிக வாய்ப்பு என தெரிந்தாலும் அதை நீங்கள் செய்ய வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாய்ப்புகள் குவியும் போது நல்லதை தேர்ந்தெடுத்து கொள்பவரும், வாய்ப்புகள் குறையும் போது உள்ளதைத் தக்க வைத்துக் கொள்பவரும் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
படைப்பில் பிரம்மாண்டமான படைப்பு நம்முடைய மனதுதான், மனதை அழகு படுத்துங்கள் வாழ்க்கை அழகாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
