கண்கள் இரண்டானாலும் காண்பது ஒன்றே, காதுகள் இரண்டானாலும் கேட்பது ஒன்றே. வாய் மட்டும். ஒன்றாக இருந்தாலும் பேசுவது மட்டும் பலவாக இருக்கிறதே.!
எதுவும் தாமதமாகி விடவில்லை. இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்கு போய்விட முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிர் பார்ப்பதெல்லாம் எதிரில் வருவதில்லை எதிரில் எது வருகிறதோ, அதை எதார்த்தமாக ஏற்றுக் கொண்டு கடந்து செல்ல, மகிழ்ந்திட வாழப்பழகுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனுபவம் என்பது எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கிறது அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு என்ன செய்தார்கள் என்பதே வெற்றிக்கும் தோல்விக்கும் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகிறது.!
திறமையானவர்கள். திறமையை அறியாதவர்கள், திறமையை பயன்படுத்தாதவர்கள் என மூன்று வகையினர் மட்டுமே உலகில் உள்ளனர். திறமையில்லாதவர்கள் என்று உலகில் எவரும் கிடையாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!