மஞ்சளா இருக்குற எலுமிச்சையை பிழிஞ்சா வெள்ளையா சாறு வருது... வெள்ளையா இருக்குற முட்டையை உடைச்சா மஞ்சளா கரு வருது.. இப்படி தான் வாழ்க்கையும். நாம ஒன்னு நெனைச்சா அது ஒன்னு நடக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிரி ஆவதற்கு தைரியம் இல்லாதவனே, துரோகி ஆகின்றான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தீமை செய்யும் வாய்ப்பு நாளுக்கு நூறு முறை வரும்; நன்மை செய்யும் வாய்ப்பு எப்போதாவது ஒரு முறை தான் வரும். அப்போதெல்லாம் மற்றவருக்கு நன்மை செய்யுங்கள். வாழ்வு வளம் பெறும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சாணியை மிதிச்சா கால கழுவிட்டு போய்கிட்டே இருக்கணும். எருமைகிட்ட போய் இங்கே சாணி போடாதே`னு Advice எல்லாம் பண்ணக்கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பேசத் தகுந்த மனிதரோடு பேசத் தவறிவிட்டால் நாம் அவரை இழந்து விடுகிறோம். பேசத்தகாத மனிதரோடு பேசினால் நமது வார்த்தைகள் பயனற்று வீணாகி விடுகின்றன. அறிவாளி என்பவன் நல்ல மனிதரையும் இழக்க மாட்டான். வார்த்தைகளையும் வீணாக்க மாட்டான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மனிதன் கடமையில் பொறுப்புடன் இருந்தால், அதற்குரிய நற்பலன் கிடைத்தே தீரும்.!
அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த காலம் காயைக் கனியாக்குகிறதோ... அந்தக் காலம் கனியை அழுகவும் வைக்கிறது. காலம் தன் கடமையை செய்து கொண்டே இருக்கும். நாம் தான் அதற்குள் ரசித்து வாழ வேண்டும்.!
சம்பாதிக்க ஒரு புத்தி வேண்டும். சம்பாதித்ததை சேமிக்க ஓரு புத்தி வேண்டும். சேமித்ததை செலவழிக்க ஒரு புத்தி வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.!
போராடி கிடைக்கும் தோல்வி கூட, கொண்டாடப்பட வேண்டிய வெற்றி தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!