தூய்மையான தீபாவளி துன்பங்கள் இல்லையினி
ஏழ்மையை ஒழித்தே ஏற்றிடுவோம் தீபமினி
மத்தாப்புச் சிரிப்பால் மனங்கள் நிறையட்டும்
முத்தான நகைப்பில் முழுநிலவு ஒளிரட்டும்
நித்தமும் இல்லத்தில் மகிழ்ச்சியே நிலவட்டும்
சித்தமும் சிறந்தே சிந்தனையும் செழிக்கட்டும்
கரியாகும் தீமையால் அகிலமே மிளிரட்டும்
அரியென இளையோர்ச் சீறியே பாயட்டும்
பரிவோடு பண்பும் பாரினில் பரவட்டும்
பிரியாமல் உள்ளங்கள் பிணைந்தே இருக்கட்டும்
மழையோடு பனியும் இதமாகப் பொழியட்டும்
அழைக்காமல் மேகமும் கருணையே காட்டட்டும்
உழைக்கின்ற உழைப்பாளி உளமும் களிக்கட்டும்
தழைக்கட்டும் பசுமையும் இயற்கையும் நிலைக்கட்டும்
பொன்னான நன்னாளைப் பொலிவோடு வரவேற்போம்
அன்போடு பெரியோரை வணங்கி மகிழ்ந்திடுவோம்.
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.