மதியம் ஹோட்டலுக்கு 2 மணிக்கு சாப்பிட போனா என்ன சாப்பிடுறீங்கனு சர்வர் கேட்பாங்க , அதே 4 மணிக்கு சாப்பிட போனா சாப்பிட என்ன இருக்குனு நாம சர்வர்ட கேட்கனும்.!
வாழ்க்கையிலசில முடிவுகள் சரியான நேரத்துல எடுக்கனும் , காலம் தவறினால் இப்படித்தான் நமக்கான ஆப்சனும் குறைஞ்சிடும் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வேகம் எதிர்பார்க்காத முடிவினை தரும் .. !! விவேகம் எதிர்பார்ப்பினை முடிவாய் தரும்.!
இந்த காலங்களில் வாழும் நமக்கு குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும் . குழி பறிக்க அல்ல . , அடுத்தவர்கள் பறிக்கும் குழியில் நாம் விழாமல் இருக்க.!
தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய் . ஆனால் ... மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே .. !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் பிடித்த வாழ்க்கை வாழ்பவர்கள் அதிஷ்டசாலிகள் ! எந்த வாழ்கையாக இருந்தாலும் பிடித்து வாழ்பவர்கள் புத்திசாலிகள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாருடனும் வாதாடாதீர்கள் யாரும் இவ்வுலகில் தோற்று போக விரும்புவதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெறும்வ ளர்ச்சி எவரையும் மனிதனாக்குவதில்லை சிந்தனைதான் மனிதனை உருவாக்குகிறது .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவலைகள் எங்கிருந்து வரும் என்று தெரியாது . ஆனால் புன்னகை நம்மிடம் தான் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இருப்பது ஒரு வாழ்க்கை .... யாரையும் வெறுக்காமல் யாரையும் துன்புறுத்தாமல் வாழ்ந்து விட்டு செல்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அழகான இடத்தை தேடி அலையாதீர்கள் அனைத்தையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் எல்லா இடமும் அழகாகவே தெரியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நிம்மதிக்கான இரண்டு வழிகள் : விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted