யாருக்கேனும் என்னை பிடிக்காதா..? எனும் நெருக்கடியை விட, யாருக்கும் பிடிக்கா விட்டால்தான் என்ன..?? எனும் சுதந்திரம் அழகு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலர் வருவார்கள். சிலர் போவார்கள். சிலர் நன்மைகள் செய்வார்கள். சிலர் தீமைகள் செய்வார்கள். சிலர் விசுவாசமாக இருப்பார்கள். சிலர் துரோகங்கள் செய்வார்கள். சிலர் சிரிக்க வைப்பார்கள். சிலர் அழ வைப்பார்கள். சிலர் சிந்திக்க வைப்பார்கள். சிலர் சிந்திக்கவிடாமல் வைப்பார்கள். எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா மிருகங்களும் அதனதன் குணத்தில் தான் வாழ்கிறது. மனிதன் மட்டும் தன் குணத்தை விட்டு எல்லா மிருக குணத்தின் கலவையாக வாழ்கிறான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரியோ தவறோ விடைகளை முன்கூட்டியே முடிவு செய்து கொண்டு தான் இங்கு பல வினாக்கள் கேட்கப் படுகின்றது. இது புரியாமல் பலர் பலவற்றை சொல்லிக் கொண்டிருக்கிறார்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முத்துக்களையும் வைரங்களையும் தேட வேண்டிய பலர், கிளிஞ்சல்களையும், கூழாங்கற்களையும் அடைவதற்காக காலத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.!
நிறையில் குறை காண்பவர்களை விட, குறையில் நிறை காண்கின்ற மனிதர்களே உயரிய மனிதர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted