இன்று (12.06.2019) புத்தனாம்பட்டி நேரு மேல்நிலைப் பள்ளியில் 1992 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களுடன் குளோபல் நேச்சர் பவுண்டேஷன் ஒன்றாக இணைந்து பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. எஸ் சிவராசு IAS அவர்கள் முதல் மரக்கன்றை நட்டு வைத்து துவக்கி வைத்தார். மேலும் முன்னாள் மாணவர்களால் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பெண்கள் கழிவறை மற்றும் விளையாட்டுத் திடல் ஆகியவற்றை திறந்து வைத்து கடந்த வருடம் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
No. of Trees Planted